இறுதி ஊர்வலத்தில் மோதியதில் 19 பேர் பலியானார்கள்.

 


 கிழக்கு சீனாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த டிரக் ஒன்று இறுதி ஊர்வலத்தில் மோதியதில் 19 பேர் பலியானார்கள்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் மீது அந்த வழியாக வந்த டிரக் இன்று திடீரென மோதியது. இந்த சம்பவத்தில் 19 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடும் பனிமூட்டம் காரணமாக, இந்த விபத்து நடைபெற்றதாகத் தெரிகிறது. சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.