அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 


இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளில், எந்தவொரு நாட்டுக்கும் தளர்வு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.