19- சிறைக்கைதிகளுக்கு இன்று விடுதலை வழங்கப்பட உள்ளது .

 


சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து நன்னடைத்தையின் அடிப்படையில் 19 கைதிகள் இன்று (17) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவிக்கையில்,

இந்தக் கைதிகள் வெலிக்கடை, பதுளை, அங்குனகொலபலஸ்ஸ, வத்தரகல, அனுராதபுர், வீரவில மற்றும் பல்லேகல சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

 குற்றத்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் 11வது பிரிவின் பிரகாரம் நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்களுக்கான அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஏகநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர்களின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த கைதிகள் இருந்தனர் என்றும் 29.11.2022 அன்று நடைபெற்ற அனுமதிச் சபையில் அமைச்சரின் அனுமதியின் பேரில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 இதேவேளை இன்று விடுதலையாகும் கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் உள்ளனரா என்ற விபரம் தெரியவரவில்லை