சகல வகையான மதுபானங்கள் மற்றும் புகைப்பொருட்களின் விலைகள் நூற்றுக்கு 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று (03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்கள் மீதான கலால் தீர்வை 20%ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு இன்று (03) அறிவித்துள்ளது.
சிகரட் மீதான கலால் தீர்வையும் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.
90 ரூபாயாக இருந்த சிகரெட் விலை 105 ரூபாயாகவும், 70 மற்றும் 85 ரூபாயாக இருந்த சிகரெட்கள் விலைகள் 80 மற்றும்100 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.