மீண்டும் பாடசாலைகளின் 2022ம் ஆண்டின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

 



நாட்டில் ஏற்பட்ட கொவிட -19 தொற்றினால் கல்வி அமைச்சினால் பாடசாலை கல்வி ஆண்டில் மாற்றம் ஏற்பட்டதனால் பாடசாலைகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பில் மீண்டும் பாடசாலைகளின் 2022ம் ஆண்டின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (2) நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவ மாணவிகள் உற்ச்சாகமாக பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இத் தவனை சகல பாடசாலைகளிலும் இன்று (2)தொடக்கம் ஜனவரி 20ஆம் திகதி வரையும், அடுத்த கட்டம் 21.01.2023 முதல் 19.02.2023 வரையும், 20.02.2023 தொடக்கம் 24.03.2023 வரை நடை பெற உள்ளது.