மட்டக்களப்பில் உழவர் திருநாளாம் “தை விழா 2023”



மட்டக்களப்பு மாவட்ட பாண்பாட்டலுவலகம் நடாத்தும் தை விழா (2023) எதிர்வரும் 17ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, முற்பகல் 9.30 மணிக்கு, மட்டக்களப்பு பொது நூலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த. மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெறவுள்ள இத் தை விழாவில், மட்டக்களப்பு மாநாகர ஆணையாளர் நா. மதிவண்ணன் மற்றும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி இ. மோகன் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்கவுள்ளனர்.
மாநகரசபை பிரதிஆணையாளர் உ. சிவாராசா சிறப்பு அதிதியாகவும், சர்வமதத் தலைவர்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
உழவர் திருநாளாம் இத் தை விழாவில் ஏர்ப்பாடல், கூத்து வராவாட்டம் மற்றும் "உள்ளூர் நெல்லும் பட்டியும்" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் என்பனவும் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.