பிறந்திருக்கும் புதிய ஆண்டினை 2023 வரவேற்கும் வகையில் நேற்று காலை மட்டக்களப்பிலுள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.
பிறந்திருக்கும் புதிய ஆண்டினை வரவேற்கும் வகையில் இன்று காலை ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருடத்தினை வரவேற்கும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
நேற்று காலை காலை ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் மூலமூர்திக்கும் வசந்தமண்டபத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்படவும் நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமைகள் நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தங்களுக்குள் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.