.
2023 ஆம் ஆண்டுக்கான பணிகளை ஆரம்பிக்கும் முதல் நாள் வைபவம் ''நுற்றாண்டுக்கான முன்னெடுப்பு'' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள், சுகாதார திணைக்களம் சார்ந்த அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள் சார்ந்த அலுவலகங்களிலும் தேசியக்கொடியேற்றப்பட்டு, இராணுவ வீரர்கள் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக 02 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அனைத்து உத்தியோகத்தர்களாலும் இவ்வாண்டிற்கான அரசசேவை உறுதியுரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின் போது உத்தியோகத்தர்களிடையே பயன்தரு மரங்கள் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கதாக்கும்.