மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் சாரணிய இயக்கத்தின் துருப்புக் கூட்டம் - 2023

 




 

 


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 2023 ஆம் ஆண்டிற்கான சாரண இயக்கத்தின் முதலாவது துருப்புக் கூட்டமானது கடந்த (06) காலை 8 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குழுச்சாரண தலைவர் எம்.சந்திரசுதர்மன் தலைமையில் இந்த ஆண்டுக்கான சாரணிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாரணதலைவர்களான என்.கௌசன், என்.சுரேஷ்குமார் என்.திசேந்திரா, எஸ்.சுகுவரன், எஸ்.சரவணதாஸ், குருளைச்சாரண தலைவர் என்.பிரதீபன், திருமதி.ஜே.விநாயகமூர்த்தி, திருமதி.சீ.பஞ்சேந்திரன் சிங்கிதி சாரணதலைவர்கள் திருமதி.எல்.ஜெயந்திரன், திருமதி.எம்.கிறிஸ்தோபர் ஆகியோரும் 140 சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டனர்.