இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் .

 


தற்போது 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள் படையினரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"இராணுவ பலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். அவை ஒன்றாக இருக்கும், ஆனால் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை" என்று அவர் கூறினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு பரிமாணங்களுக்கு இணையாக வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே மூலோபாய வரைபடத்தின் ஒட்டுமொத்த நோக்கமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.