எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைகளை கருத்திற் கொண்டு இரவு நேரங்களில் மின் வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.