ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம் இன்று 24 ஆம் திகதி காலை 9 மணியளவில் ஊடகவியலாளர் நினைவு தூபியில் நடை பெற்றது

 

 









திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 17 நினைவஞ்சலி நிகழ்வு, இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் , மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், என்பன இணைந்து அஞ்சலி நிகழ்வை
ஏற்பாடு செய்திருந்தன .
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேந்திரன், மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ஆகியோரும் மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள், மதத்தலைவர்கள். சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.