கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது

 


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4,500 இலங்கை பக்தர்களையும், 3,500 இந்திய பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மத குருமார்கள் உள்ளடங்கலாக ஆயிரம் சிறப்பு அதிதிகளையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.