தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைவதால், நாடு முழுவதும் நாளை (30) முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் 150 மில்லி மீற்றர் அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் தெரிவிக்கிறது.
நாட்டில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.