இறக்குமதி செய்யப்படும் முட்டை 40 ரூபாய் முதல் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

 


அடுத்த வாரம் முதல் இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பான கூட்டம் வர்த்தக அமைச்சில் புதன்கிழமை (04) மாலை இடம்பெற்ற போதே அமைச்சர்  இவ்விடயத்தை அறிவித்தார்.  

இறக்குமதி செய்யப்படும் முட்டை  40 ரூபாய் முதல் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில், முட்டைகளின் அளவு, தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள், விலை உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.