உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பில் 5 கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் வேட்பு மனுத்தாக்கல்!!
2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக கடந்த (18) திகதி புதன்கிழமையிலிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் இறுதி நாளான நாளை 21ஆம் திகதி வரை மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அலுவலகமான மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் மூன்றாவது நாளான இன்று (20) திகதி பிற்பகல் 4.15 வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய நகர சபைகளுக்கும், மேலும் 5 பிரதேச சபைகளுக்குமாக மொத்தமாக 5 கட்சிகளும், ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனுக்களை ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 25 கட்சிகளும் 25 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை
438,108 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.