மட்டு கரடியனாற்றில் 47அரை இலச்சம் பெறுமதியான 16 மாடுகள் கடத்தல் ஏறாவூர் தளவாயில் தோல் பதனிடும் கம்பனியில் கடத்தப்பட்ட மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு






(கனகராசா சரவணன் )

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள  காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று ஏறாவூர் தளவாய்; தோல் பதனிடும் கம்பனியில் விற்பனை செய்த இளைஞன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்ததுடன் தோல்கம்பனில் எரிக்கப்பட்ட நிலையில் மாட்டுகன்றுகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

புதார் பிரதேசத்தைச் சேர்ந் கால்நடை உரிமையாளர் தனது உன்னிச்சை குளப்பகுதியில் இருந்த 16 மாடுகளை கொண்ட மாட்டு பட்டியை வேளாண்மை செய்கை காரணமாக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 26 ம் திகதி அந்த மாட்டுபட்டியை அங்கிருந்து கரடியனாறு காருமலை பகுதிக்கு நகத்;தி சென்று பட்டி அமைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ம் திகதி அங்கிருந்த கன்றுதாச்சியான மாடுகள் உட்பட 16 மாடுகள் காணாமல் போய்யுள்ளதையடுத்து அதனை தேடிய நிலையில் கரடியனாறு செங்கலடி பிரதான வீதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிரி கமராக்களை சோதனையிட்டபொது மாடுகளை இருவர் கால்நடையாக கடத்திச் செல்லும் வீpடியோ பதிகாகியுள்ளதையடுத்து மாடுகடத்தும் குழுவைச் சேர்ந்த  கித்துள் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில்  கடத்திச் சென்ற மாடுகளை ஏறாவூர் தளவாயிலுள்ள தோல் பதனிடும் கம்பனி விற்பனை செய்துள் கம்பனியை கதட்டிய நிலையில் பொலிசார் அந்த கம்பனியை சுற்றிவளைத்து தேடுதலில் கடத்தி வந்த மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் வெட்டப்பட்ட கன்றுதாச்சி மாடுகளின் வயிற்றில் இருந்த கன்றுகள் அந்த பகுதி நிலத்தில் எரியூட்டப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்தாகவும்.

தோல் கம்பனி உரிமையாளர் மற்றும் மாடுகடத்தலில் ஈடுபட்ட கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த  இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும்  நீண்ட காலமமாக கரடியனாறு பகுதியில் மாடு ஆடு கடததலில்  குழு ஒன்று இயங்கிவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலசார் தெரிவித்தனர்.

இதேவேளை கரடியனாறு பிரதேசத்தில் நேற்றைய தினம் 8 மாடுகளை காணவில்லை என அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.