(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு ஏறாவூரில் ஜஸ்போதை பொருள் மற்றும் ஹரோயின் போதை பொருள்களுடன் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 5 போதைப் பொருள் வியாபரிகளை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை (12) உத்தரவிட்டார்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய போதை ஒழுpப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஏறாவூர் பிரதேசத்தில் பேதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களை சுற்றிவளைத்து புதன்கிழமை (11) முற்றுகையிட்டனர்.
இதன்போது 30 வயதுடைய இரட்டை கொலை தொடர்பான சந்தேகநபர், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச் பிறப்பிடமாக கொண்ட 26 வயதுடைய பிரபல போதைவியாபாரி, பிரபலகாணி மாபியாவான 40 வயதுடையவர், மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த 36 வயதுடைவர், 24 வயதுடைய போதை வியாபாரிகளான 5 பேர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 6 கிராம் ஜஸ் போதை பொருளும், 2.6 கிராம் ஹரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்தவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 24 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.