குறைந்த விலையில் ஐபோன்களை வழங்குவதாக கூறி 500 பேரிடம் இருந்து 50 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 15, மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபர் இருவரினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் புகார்களில், சந்தேகநபர் 7.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மொபைல் போன்கள் தருவதாக உறுதியளித்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருப்பதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.