நாளைய தினம் 3 மாகாணங்களுக்கு 53 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்யவுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் குறித்த விலைக்கு முட்டையை விற்பனை செய்யவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வைத்தியசாலைகளில் நிலவிய முட்டை பற்றாக்குறையை நாம் நிவர்த்தி செய்தோம்.
ஏனைய வைத்தியசாலைகளுக்கும் முட்டைகளை வழங்க எதிர்ப்பார்த்துள்ளோம்.
இந்தநிலையில், நாளையதினம் ஆரம்பிக்கும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, குருநாகல், கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் நுவரெலியாவில் இருந்து ஊவா மாகாணத்துக்கும் முட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
குறித்த பகுதிகளில் எமது வாகனம் பயணிக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு 53 ரூபாவுக்கு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும்,
இதன்போது, வாடிக்கையாளர்கள் கேட்கும் எண்ணிக்கையில் முட்டைகள் விநியோகிக்கப்படும்.
நாளைய தினத்தில் குறித்த 3 மாகாணங்களிலும் முட்டையை சீராக விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன், ஏனைய மாகாணங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் முட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.