55 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது .

 

 

 


நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட 55 அரச நிறுவனங்கள் கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 86,000 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளன.

பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இது முந்தைய ஆண்டில் (2021) அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.