விபச்சார விடுதி ஒன்றில் 5 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .


 

விடுதி என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையின்போது 5 வெளிநாட்டு பெண்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (13) இரவு கொள்ளுப்பிட்டி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 முதல் 38 வயதுடையவர்கள் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.