காலி வீதியில் வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வஸ்கடுவ மயானத்தை நோக்கி சென்ற இறுதி ஊர்வலத்தின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள், களுத்துறை பொது வைத்தியசாலையிலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டிச் சாரதி உறங்கியமையே விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது