நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.