கிழக்கு ஜெருசலேமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 


கிழக்கு ஜெருசலேமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் ஊடகங்கள் துப்பாக்கி தாரியை கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்த பாலஸ்தீனியர் என அடையாளம் கண்டுள்ளது.

எனினும் குறித்த துப்பாக்கி சூட்டுக்கு எந்தவொரு தரப்பும் பொறுப்பு கூறவில்லை.