போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு 250 சத்துமாப் பொதிகளை மட்டக்களப்பு றோட்டரிக்கழகம் (03) வழங்கியது.
செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் அலுவலகத்தில் வைத்து இச்சத்துமாப் பொதிகளை பிள்ளைகளுக்கு மட்டக்களப்பு றோட்டரிக்கழகமானது, செங்கலடி பிரதேச சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கியது .
மட்டக்களப்பு றோட்டரிக்கழகத் தலைவர் றோட்டரியன் புஞ்சியப்பு ரமணதாச தலைமையில் இச்சத்துமாப் பொதிகள் வழங்கப்பட்டன.