எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.