மட்டக்களப்பு கிரான் குடும்பி மலை பிரதான போக்குவரத்து வீதியில்
அமைந்துள்ள பாலம் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டமையால்,
போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகஸ்த்தர்கள்,விவசாயிகள்,கால் நடை பராமரிப்போர்,பொதுமக்கள் என பலரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
போக்குவரத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில், சிலர் தோணிகள் மூலம் தற்காலிக போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
குடும்பி
மலை பிரதான பாலம் உடைப்பெடுத்தமையால், பிரதேச செயலகம், சுகாதார திணைக்களம்
பாடசாலைகள்,நெல் சந்தைப்படுத்தல் சபை,கால் நடை திணைக்களம் போன்றவற்றின்
நிர்வாக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இந்தப் பாலத்தின் ஊடாக
கனரக வாகனத்தில் மணல் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையே பாலம்
சேதமடைந்தமைக்கான காரணம் என பிரதேசவாசிகள் விசனம் வெளியிடுகின்றனர்.
நீண்டகாலமாக இப் பாதையினை புணருத்தாரனம் செய்து தருமாறு கோரிக்கை
விடுத்தும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் நடவடிக்கை
எடுக்கவில்லையென்றும் பிரதேவாசிகள் கவலை வெளியிட்டனர்.
பாலம் உடைந்தமை
தொடர்பில், தகவலறிந்து. சம்பவ இடத்திற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி
திணைக்கள பொறியிலாளர்கள் நிலமைகளை பார்வையுற்றதுடன்
தற்காலிக போக்குவரத்திற்குரிய கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.