மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான
வேட்புமனுக்களை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று தாக்கல்
செய்தது.
அக் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும்
கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு
மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வேட்புமனுக்களை
தாக்கல் செய்தனர்.
தேசிய
மக்கள் சக்தி,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் சுயேட்சைக் குழுக்கள்
சிலவும் இன்று வேட்புமனுக்களை மட்டக்களப்ப தேர்தல் திணைக்களத்தில்
கையளித்திருந்தனர்.