அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75வது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்போது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படம் உள்ளிட்ட முத்திரையை இலங்கை வெளியிடவுள்ளது.
இலங்கை தனது 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படம் அடங்கிய நினைவு முத்திரையை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நமோ நமோ மாதா - ஒரு நூற்றாண்டை நோக்கி ஒரு படி' என்ற தொனிப்பொருளில் பெருமையுடன் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தின் போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான அரசக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் தனது புதிய சீர்திருத்தப் போக்கை அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர தின விழாவின் பிரதான வைபவம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.