போராட்டம் ஒருவாரத்துக்கு தொடரும்.

 


அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணக் கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த போராட்டம் ஒருவாரத்துக்கு தொடருமென அறிவித்துள்ளனர்.   

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் நேற்று (23) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளின் சிறு சுகாதார பணியாளர்களும் நேற்றுக்காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.