கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியொன்று தனது கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.
வடகிழக்கு மாகாணத்தில் தனித்து களமிறங்கவுள்ள இலங்கை
தமிழரசுக்கட்சியானது மட்;டக்களப்பில் தனது உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான
கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள தேர்தல்
அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்
கட்டுப்பணத்தினை செலுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கைவெளியிட்டார்.