தமிழ்நாடு பாலமேடு பகுதியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாடு பாலமேடு பகுதியில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.