ஆனந்தகிரி அறப்பணி சபையினால் ஆரையம்பதி பிரதேசத்தில் மின் ஒழுக்கினால் தீப்பற்றி எரிந்து முற்றாக வீடு சேதமடைந்த குடும்பத்திற்கு வீட்டுக்கூரைக்கான மரங்கள், அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக பிரிவில் செல்வாநகர் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் நாளாந்தம் சிறு உணவுகளை தயாரித்து மக்களுக்கு வினியோகித்து தமது வாழ்க்கையை நடாத்தி கணவன், மனைவி, ஆண்பிள்ளையுடன் தனிக்குடும்பமாக வசிக்கும் வசதிகுறைந்த குடும்பமொன்றின் வீடு கடந்த 30.12.2022 ம் திகதி மின் ஒழுக்கினால் வீடு முற்றாக தீப்பற்றி எரிந்து உடமைகள் அனைத்தும் நாசமாகி இருந்தன. இச்செய்தி சமூக ஊடகங்கள், செய்திகள், காணொளிகள் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையை அறிந்து மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையினால் இக்குடும்பத்துக்கான உடுதுணிகள், வீட்டுக்கூரைக்கான மரங்கள் 08.01.2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவசர உதவியாக வழங்கிவைக்கப்பட்டது. இதில் ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் திரு.லோ.தீபாகரன், செயலாளர் திரு.நே.பிருந்தாபன், ஊடகவியலாளர் திரு.உ.உதயகாந் ஆகியோர் நேரடியாக சென்று நிலமையை பார்வையிட்டு குறித்த பொருட்களை வழங்கிவைத்தனர்.
இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொழில் உபகரணங்கள், நிரந்தர வீடு அமைத்துக்கொடுப்பதற்கான உதவிகளை செய்துதருமாறு பாதிக்கப்பட்டுள்ள இக்குடும்பத்தின் தாய் தயவாக கேட்டுக்கொண்டார்.