மொணராகலை, பாராவில கும்புக்கன என்னும் இடத்தில் உள்ள சிறி கருமாரியம்மன் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலையில் கடந்த சில நாட்களாக நெய் வடிகிறது.
குறித்த பிள்ளையார் சிலையில் 2023.01.10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நெய் வடிந்து வருகிறது.
அதேவேளை, நெய் வடியும் பகுதியை கழுவிய போதும் இடைவிடாது நெய் வடிந்து வருவதாகவும் ஆலயத்தார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் மொணராகலை பிரதேசத்தின் சக்தி வாய்ந்த ஆலயம் எனவும் குறித்த சிலை 40 வருட பழமை வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த மக்கள் குறித்த சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.