(கனகராசா சரவணன்)
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலி; வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பெலிசார் தெரிவித்தனர்.
தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று இரவு வேளாண்மையை காட்டுவிலங்ககளிpல் இருந்து பாதுகாப்பதற்காக சென்று கால்காத்துவந் நிலையில் அதிகாலை 2 மணியளவில் யானை தாககியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்
இவரின் சடலம் நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைககாக வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரவதாக பொலிசார் தெரிவித்தனர்.