கனடா பிரஜை ஒருவர் சர்வதேச விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளார் .


  

 

 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை பதிவாகியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த பயணி ஒருவர் வருகை முனையப்பகுதியில் மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில் மரணித்துள்ளார்.

55 வயதுடைய கனடாவை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதோடு, பிட்டகோட்டே பகுதியில் வசிக்கும் உறவினரை பார்வையிடுவதற்காக அவர் வருகை தந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.