அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார்) கல்வித்திட்டங்களில் ஒன்றாக, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று, காரைதீவில் உள்ள பாடசாலைகளில் இருந்து பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் நேற்று முன்தினம் (10) பாராட்டி கௌரவிக்கபட்டனர்.
அந்தவகையில், காரைதீவு பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 29 மாணவ மாணவிகளுக்கும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும், வைத்தியத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவிகளுக்கும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கும் ‘ஒஸ்கார்’ விசேட நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
விபுலானந்தா மத்திய கல்லூரி, காரைதீவு க.மு சண்முகா மகா வித்தியாலயம், ஆகிய இரு பாடசாலைகளிலும் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.