கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான, டிசம்பர் மாதம் முதன்மை பணவீக்கம், 59.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக பதிவான முதன்மைபணவீக்கம், டிசம்பர் மாதம் இவ்வாறு வீழ்ச்சிடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உணவு பணவீக்கம் 69.8 சதவீதத்திலிருந்து, 59.3 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 60.4 சதவீதத்திலிருந்து, 59 சதவீதமாகவும் குறைவடைந்துள்ளது.
போக்குவரத்து பணவீக்கமானது, 104.4 சதவீதமாக கடந்த நவம்பரில் காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 103.2 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.