அரசியலமைப்பில் வாய்ப்புக்கள் இருந்தால் இந்த நாட்டின் அதிபராவதற்கும் எனக்குத் தகுதிகள் உண்டு இதனை நான் பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது சந்தர்ப்பம் வழங்கப்படுமானால், நான் பிரதியமைச்சராகவோ அல்லது ராஜாங்க அமைச்சராகவோ பதவி ஏற்க மாட்டேன். அமைச்சராவதுதான் எனது முடிவு என தெரிவித்துள்ளார்.
அதைவிட, இலங்கையின் அரசியல் யாப்பு மாறியிருந்தது என்று சொன்னால், நான் நாட்டின் அதிபர் பொறுப்பை வகிக்கவும் தகுதியானவன் தான்.