அதிதிகளுக்கு மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன், வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்றது.
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் 4 அணியினராக பிரிக்கப்பட்டு சிநேகபூர்வமாக இடம்பெற்ற போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்ததுடன், காந்தி ரைடர்ஸ் அணியினர் வெற்றியீட்டியுள்ளனர்.
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜிவானந்தன் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பி.சசிந்திரா, சிவன் கோவில் பூசகர் மற்றும் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.