மண்மேடு சரிந்து வீழ்ந்தது ,போக்குவரத்து பாதிப்பு .

 


கண்டி - மஹியங்கனை 18 வளைவு வீதியின் 14 மற்றும் 15ஆம் வளைவுகளுக்கு இடையே மண்மேடு சரிந்து வீழ்ந்தமையை அடுத்து அந்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

தற்போது குறித்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.