அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

 


 அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு முன்பாக,
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்கோரியும் புதிய வரிக்கொள்கையினை மீளப்பெறக்கோரியும்
ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து பதாகைகளுடன் ஊர்வலமாக வந்த
வைத்தியர்கள் பல்வேறு கோசங்களை ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவானது இரவு 10.00மணி வரையும் சேவையினை வழங்கும்போதும்
அங்கு சிகிச்சைபெறுவதற்காக வரும் நோயாளிகளுக்கு மருத்து வழங்குவதில் பாரிய தட்டுப்பாடுகள் நிலவுவதாக
வைத்தியர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் பாரிய கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அரச வைத்தியசாலைகளை மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களே நாடி வரும் நிலையில் அவர்கள் கடும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும்
வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.