விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண் விவசாய ஆர்வலராக மாலதி பரசுராமன் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றியுள்ளார்.
கன்னோருவ A9 ரகம், HOB-2 எனப்படும் முதலாவது போஞ்சி மரபணு ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தியமை, புதிய கலப்பின கறி மிளகாய் வகையான "பிரார்த்தனா"வை அறிமுகப்படுத்தியமை போன்ற பல ஆராய்ச்சிகளை மாலதி பரசுராமன் மேற்கொண்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த செல்வி.பரசுராமன் மாலதி விவசாயத்திணைக்கள வரலாற்றில் பணிப்பாளர் நாயகமாக கடந்த 02.01.2023 திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.