வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு .


 

 2022ம் ஆண்டிற்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவி கிரிஷாயினி பவேந்திரன்,மட்டக்களப்பு மாவட்டத்தில்
முதலிடத்தைப் பெற்றுச் சாதனைபடைத்துள்ளார்.
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையிலிருந்து 2022ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு 114 மாணவிகள் தோற்றியிருந்த நிலையில், 62 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்;கு
மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
மாவட்ட நிலையில் முதலிடத்தைப் பெற்ற கிரிஷாயினி பவேந்திரன் உட்பட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வுஇடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் இணைந்து பாராட்டிக் கௌரவித்தனர்.