5 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த கம்பகா பொது வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி ஒருவர் யாகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அம்புலன்ஸ் சாரதி நீண்டகாலமாக ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹெரோயின் குடித்துவிட்டு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸை ஓட்டிய நேரங்கள் கூட உண்டு என்று கூறப்படுகிறது.
சீதுவ ரத்தொலுகம கொடுகுடா பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.