இனிமேல் ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பண்ண முடியாது ,புதிய சட்டம் வருகிறது

ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.