மரணவீட்டில் திருமணத்துக்கு நாள் பார்க்கின்றது தேர்தலை வைப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன கேள்வி?




(கனகராசா சரவணன்)

நாடு உணவுக்கே பணம் இல்லாது அகல பாதாளத்தில் இருக்கின்ற நிலையில் மரணவீட்டில் திருமணத்துக்கு நாள் பார்க்கின்றது போல மக்கள் பொருளாதாரத்தால் கஷ;டப்படுகின்ற நிலையில் தேர்தலை வைப்பதால்  மக்களுக்கு என்ன நன்மை? எனவே போட்டியிடும் வேட்பாளர்கள்  தேர்தலுக்கான செலவை வழங்கவேண்டும் நாடு இருக்கின்ற நிலவரத்தில் தேர்தல் தீர்வாகாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன இன்று ஞாயிற்றுக்கிழமை (8 ஜனவரி) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று நாட்டிலுள்ள பொருளாதார நிலையை பார்த்து மிகவும் கவலையாகவுள்ளதுடன் எல்லா பக்கமும் சீரழிந்துள்ளதுடன்  அராங்கமும் மக்களும் நிர்க்கதியாக இருக்கின்ற இந்த நேரத்தில் தேவையில்லாத ஒரு தேர்தல் நடாத்துமாறு மிகவும் அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த  பொருளாதாரத நெருக்கடியால் மக்கள் நாடு கடந்து செல்லும் நிலை அதிகரித்துள்ளதுடன்  கடந்த 6 மாத்திற்கு முன்னர் 100 ரூபாவுக்கு 7 முட்டை விற்பனை செய்தனர் இன்று ஒரு முட்டை வாங்க 80 ரூபா தேவைப்படுகின்றது அவ்வாறே பால்மா 350 இருந்தது இன்று ஆயித்து 250 ரூபா தேவை இவ்வாறு மக்கள் இன்று அன்றாடம் உணவு உண்பதற்கு கஷ;ரப்படுகின்றதுடன் பட்டினிலால் குழந்தைகள் இறந்து போகின்றனர்.

இவ்வாறான நிலையில் இன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சம்பள் கொடுக்க கூட அரசிடம் பணம் இல்லை என்பதுடன் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சம்பள் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய காலகட்டத்துக்கு கொண்டுவரப் போகின்றனரா?  

எனவே தேர்தல் இப்போது பொருத்தமில்லை  இப்ப தேவை எமது நாட்டின் நெருக்கடியை தீர்க்க ஆலோசனை தெரிவிப்பவர்களே அதைவிடுத்து சண்டை பிடிக்க வந்துள்ளனரே தவிர அரசாங்கத்துக்கு பொருளாதாரத்தை எப்படி கட்டியொழுப்பலாம் என எவரும் முன்வரவில்லை

1972 ம் ஆண்டு தொடக்கம் 93 ம் ஆண்டுவரை 21 வருடம்  உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்கவில்லை அதன் பின்னர்; 1994 தேர்தல் நடைபெற்றது எனவே இப்ப உள்ள காலசூழலில் பிரதேச சபைகளை பிரதேச செயலகத்திடம் வழங்கி அங்கு வேலை இல்லாமல் இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பொறுப்பு கொடுத்து அவர்கள் மூலம் இந்த உள்ளூராட்சி மன்றத்தை இயக்கமுடியும்.

நாட்டை சுனாமி பேரழிவு மற்றும் கொரோனா தாக்கம் 30 வருட யுத்தம் போன்றவற்றால் மிக பேரழிவுகளை சந்தித்துள்ளதுடன் ரஷ;சியா உக்கிரேன் போரால் மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்பபடுத்தியுள்ளது எங்களுடைய சுயதொழில் நாடு நிற்கவேண்டும் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும.

அதேவேளை வெளிநாடுகளில் உணவுக்கு கையேந்தாமல் உற்பத்திகளை செய்வதற்கு திட்டங்கள் தீட்டி அபிவிருத்திக்கு கையேந்தி தொழிற்சாலைகளை உருவாக்கவேண்டும் அதைவிடுத்து தேர்தலை நடாத்து என அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதாக மக்களுக்கு தான் நெருக்கடியை கொடுக்கின்றனர் வெளிநாடுகளில் கடனை வாங்கி தேர்தலை நடாத்திவிட்டு கடனை எப்படி கொடுப்பது ?

தேர்தல் நடத்தவேண்டும் என்பது ஜனநாயக இருந்தும் தேர்தல் நடாத்த வேண்டும் என்பவர்கள் அதற்கான செலவை அவர்கள் அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும் என்பதுடன் சம்பளத்தை எதிர்பார்க்க கூடாது

நாட்டை நேசிக்கும் ஒருதரும் தேர்தல் நடாத்த விரும்பமாட்டார்கள்  மக்களுக்கு என்ன செய்யலாம்  நாடாளுமன்றத்தில் என்ன நடக்கின்றது மக்களையும் பைத்தியகாரனாக்கி உலக நாடுகளையும் பைத்தியகாரணக்கி கொண்டு தங்கடை இருப்பை தக்க வைக்க ஊடகங்களில் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கின்றனரே தவிர மக்களுக்கு இந்த நேரத்தில் என்ன நம்மை செய்யலாம் என பார்க்கின்றனரா?  இல்லை என்பது வேதனையாளிக்கின்றது.

நாடு இன்னும் வங்குரோத்து நிலைக்கு போகும் நிலையில்  மக்கள் இன்னும் கஷ;ரப்படவேண்டும் என விரும்புகின்ற அரசியல் வாதிகளையும் கட்சிகளும் பாராளுமன்றத்தில் இருக்கின்றபோது நாடு தலைகீழான நிலை ஏற்பட்டுள்ளது மத்திய வங்கி ஆளுநர் தேர்தல் நடாத்தினால் நெல் கொள்வனவு செய்ய பணம் இல்லாமல் போகும் என்கின்றார் சாப்பாடு இல்லாவிட்டாலும் தேர்தல் வேண்டுமா?  என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.