பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளராக செபமாலை மகேந்திரகுமார் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 


பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளராக செபமாலை மகேந்திரகுமார் நேற்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஏலவே, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக இருந்த திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், இதே பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றி, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய பணிப்பாளராக மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டார். 

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த இவர், இதே வலயத்தில் பிரதி கல்வி பணிப்பாளராக கடமை ஆற்றி வந்தார்.  

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி அதிபராகவும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம், திருக்கோவில், மட்டக்களப்பு மேற்கு,  பட்டிருப்பு ஆகிய வலயங்களில் பிரதிக் கல்வி பணிப்பாளராக கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வந்தார்.