இளைஞர்களையும்,யுவதிகளையும் இந்தத் தேர்தலில் முன் நிறுத்துவோம். -கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்.

 


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

மட்டக்களப்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் கூறினார்.

 இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன்வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்தத் தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும்,யுவதிகளையும் இந்தத் தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” - என்றார்.